Categories
அரசியல்

கறார் காட்டும் திமுக…. நீட்டிக்கும் இழுபறி…. புது ரூட்டு போட்ட 3 கட்சிகள்…!!

திமுக தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீட்டிக்கும் பட்சத்தில் விசிக, காங், கம்யூ கட்சிகள் மநீம கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஒரு கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுத்து வருகிறார்கள். திமுகவில் தொகுதி பங்கீட்டில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகள் ஒதுக்கியதால் காங்கிரஸ் அதிரருப்தியில் இருக்கிறது. இதையடுத்து ராகுல் காந்தி இதற்குத்தான் இத்தனை முறையை தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்தேன் என்று ஆவேசம் தெரிவித்தார். இதையடுத்து இதே நிலைமை விசிக கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்குமாறு விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக 4 சீட்டுக்கு மேல் தர முடியாது என்று கறார் காட்டி வருகிறது. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக  கட்சிகள் அதிருப்தியில் இருப்பதால் தொடர்ந்து இழுபறி நீடிக்கும் பட்சத்தில் கமல் தலைமையில் இந்த காட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |