Categories
மாநில செய்திகள்

கறித்துண்டு பிரச்சனையில் கொலையா….? நண்பர்களுக்கு இடையே தகராறு…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா மற்றும் அவருடைய நண்பர் ஷேர்கான். இருவரும் சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்டு கறி விருந்தில் உணவு பரிமாறினார் ஷேர்கான். உணவு பரிமாற்றத்தில் ஷேர்கான் சிவாவிற்கு குறைவான கறி துண்டு வைத்ததால் ஆத்திரமடைந்த சிவா அன்று இரவு ஷேர்கானை கத்தியால் குத்தியுள்ளார்.

ஷேர்கான் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்ததோடு சிவாவை சமாதான படுத்துவதாக  கூறி அவரை நடுக்காட்டில் அழைத்து சென்று சரமாரியாக வெட்டிக்கொன்று அதே இடத்தில்  புதைத்தார். இதையடுத்து சிவாவின்  தயார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஷேர்கான் சிவாவை அழைத்து சென்று நடுகாட்டில் கொன்று புதைத்த சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து ஷேர்கானை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |