மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கொத்தனாரான நாராயண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் சமையலுக்காக கறிவேப்பிலை பறிக்க மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மரத்தின் அருகில் சென்ற மின்கம்பி எதிர்பாராதவிதமாக ரத்தினத்தின் கையில் உரசி விட்டது.
இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரத்தினத்தை நாராயண பெருமாள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.