Categories
அரசியல் மாநில செய்திகள்

கறுப்பர் கூட்டத்தினுடைய இன்னொரு வடிவம் ? – பிரபல யூடியுப் சேனல் மீது டிஜிபியிடம் புகார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார், U2 புரூட்டஸ் என்கின்ற யூடியுப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டாக கோரிக்கை மனுவை சமர்ப்பித்து இருக்கிறோம். குறிப்பாக அனைத்து மத மக்களுக்கும் நல்லிணக்கத்தோடு வாழவேண்டும் என்கின்ற அடிப்படையில் , தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிப்பிற்குரிய டி.ஜி.பி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசி இருந்தார்கள்.

இந்த சமூக நல்லிணக்கத்திற்கும், மத ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட இந்து மதத்தினுடைய நம்பிக்கைகளை, பண்பாட்டை, பாரம்பரியத்தை, பழக்கவழக்கத்தை உடைக்க வேண்டும், அந்த கட்டுகளை அவிழ்க்க வேண்டும் என்கின்ற திராவிட வெளிநாட்டு சிந்தனை உடைய உடைப்பு வாதிகள் ஊடகங்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள். இந்த U2 புரூட்டஸ் என்று இருக்கக்கூடிய மைனர் என்கின்ற ஒரு சகோதரர், அது தவிர்த்து சைவ நெறியில் பேசக் கூடியதாக சொல்லக்கூடிய பிரகாஷ் என்கின்ற சைவ சித்தாந்தம் என்ற பெயரெல்லாம் போடுகிறார்கள்.

குறிப்பிட்டு இந்துமத பழக்க-வழக்கங்கள் மட்டுமல்லாது நம்முடைய கடவுள்களை குறித்தான தவறான விஷயங்களை பதிவு செய்கிறார்கள். இது போன்று நடக்க கூடிய சூழலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்ந்த தை ஒன்றா, சித்திரை ஒன்றா என்கின்ற தமிழர் புத்தாண்டு சர்ச்சையை, வேண்டுமென்றே உருவாக்கி அதன் மூலமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சூழலை திசை மாற்றம் செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில் இவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். அனைத்து மதங்களும் நம்பிக்கைக்கு உரியது, எந்த கடவுள்களையும் விமர்சிக்கக்கூடாது இதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்து சமுதாயத்தினுடைய கடவுள் நம்பிக்கைகள் குறித்து எங்களுடைய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த கூடிய வேலையை செய்ய வேண்டாம் கறுப்பர் கூட்டத்தினுடைய இன்னொரு வடிவமாக இந்த U2 புரூட்டஸ் செயல்படுகிறார்கள், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |