Categories
அரசியல் மாநில செய்திகள்

கறுப்பர் கூட்டத்தை வளர்த்தது….! பின்னணியில் இருப்பது ஸ்டாலின்…! திமுக மீது கடும் குற்றசாட்டு …!!

கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விடுபட்ட குடியிருப்புகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை 75 கோடி மதிப்பீட்டில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்ருக்கு மத சாயம் பூசக்கூடாது.

எம்.ஜி.ஆர் சிலை மீது மதச் சாயம் பூசி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களை நிலைப்பாடு. அனைத்து மதங்களையும் சமமாகப் பார்க்கும் கொள்கை கொண்டது அதிமுக கட்சி தான். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று ஸ்டாலின் சொல்வது கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதை போல உள்ளது. கறுப்பர் கூட்டத்தை வளர்த்து விட்டது விட்டதே மு க ஸ்டாலின் போன்ற தலைவர்கள்தான் என்று கூறினார்.

Categories

Tech |