Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழா…. பக்தர்கள் தரிசனம்…!!

கற்பக விநாயகர் ஆலயத்தில் குடமுழுக்கு திருவிழா நடைபெற்றுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருவெண்காடு மேலவீதியில் கற்பக விநாயகர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் குடமுழுக்கு திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் யாகபூஜைகள் நடைபெற்றுள்ளது. மேலும் மேளதாளம் முழங்க புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதன்பின் மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்த குடமுழுக்கு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றுள்ளனர்.

Categories

Tech |