Categories
சினிமா தமிழ் சினிமா

“கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே”…… மதுரையில் பரபரப்பு Poster…..!!!!

நாளை நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பலவிதமாக போஸ்டர்களை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட முடியவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். அதற்கு பதிலாக இந்த வருடம் அவரது 48-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் வடக்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் ‘கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ஒற்றை தலைமைக்கு எதிராக ஓபிஎஸ்ஸை சீண்டும் விதமாக பார்க்கப்படுகின்றது. இந்த போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |