ராமேஸ்வரம் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 100 சிறிய செயற்கை கோள்கள் நாளை காலை விண்ணில் பறக்கப்பட்ட இருக்கின்றது.
டாக்டர் ஏபிஜே கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பெஸ் ஆன் இந்தியா மற்றும் மார்டின் குரூப் இணைந்து டாக்டர் அப்துல் கலாம் பெயரில் 100 சிறிய செயற்கை கோள்களை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை கோள்கள் நாளை காலை பலூன் மூலம் விண்ணில் பறக்க விட்டு துவங்கப்பட உள்ளது. 5 அடி முதல் 8 அடி உயரத்திற்கு வானில் இந்த செயற்கைக்கோள்கள் பறக்க விடப்படுகிறது.
இந்த செய்ற்கை கோள்களை 7மாநிலங்களை சேர்ந்த 1000 மாணவர்கள் 6 நாள் இணையவழி பயிற்சியை கொண்டு உருவாக்கியுள்ளனர். வானிலை, விவசாயம், உலக வெப்பமயமாதல், வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட தகவல்களை நேரடியாக மாணவர்களிடம் காண்பிப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . செயற்கைகோள் விழாவை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தொடங்கி வைக்கிறார்.