சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவளித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பார்த்த விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நடித்ததை போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.
சூரரைப் போற்று திரைப்படத்தில் அப்துல்கலாம் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தவர் கலக்கப்போவது யாரு நவீன். அப்துல்கலாம் கதாபாத்திரத்தில் நடித்தவர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர்.
இவர் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது தோற்றத்தை சிகை அலங்காரம் செய்து அப்துல் கலாமின் தோற்றத்தைப் போலவே மாற்றிக்கொண்டார். இவர் மக்களால் ‘உடுமலை கலாம்’ என்று அழைக்கப்பட்டு வந்தார். படத்தை பார்ப்பதற்கு முன்பே ஷேக் மைதீன் இயற்கை எய்திவிட்டார்.