மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த மாணவரை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு, செய்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது.
கணேசன் – மீனாட்சி தம்பதியின் மகன் யோக பாலாஜி என்பவர், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல்களை பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவரது சேவையை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் மாணவர் யோக பாலாஜியையும் சேர்த்தது. இந்நிலையில், மாணவர் யோக பாலாஜிக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது.