தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை பெருநகரத்தின் வெள்ள அபாயம் மற்றும் பிற அவசரகால உதவிக்கு கீழ்க்கண்ட எண்களை அணுகுமாறு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (தென் சென்னை மாவட்டம்) அறிவித்துள்ளது.
வேளச்சேரி:
திவாகர்- 9087674727
சோளிங்கநல்லூர்
சரத்குமார்- 9710702365
தாம்பரம்
காண்டீபன்- 9655601539
பல்லாவரம்
ஹேமக்குமார்- 8807196922
மயிலாப்பூர்
மகேஷ்- 9003140584
தி நகர்
தென்னரசு-9789899235
மதுரவாயில்
இமயவர்மன்- 8190034318
ஆலந்தூர்
ராஜாமணி- 9094616138
சைதாப்பேட்டை
பாலாஜி- 9500135291
விருகம்பாக்கம்
வினோத்- 9551901911
ஆகிய எண்களை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.