Categories
தேசிய செய்திகள்

கலங்கி நிற்கும் தலைநகரம்…. அணையாது எரியும் மயானங்கள்….கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் எடுத்த விபரீத முடிவு….!!

டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த பிரபல மருத்துவ தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனானாவின் தாக்கம் பல மடங்கு அதிகரித்ததை தொடர்ந்து பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மயானங்களில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதோடு சடலங்கள் தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மேக்ஸ் மருத்துவமனையில் கொரோனாக்கு சிகிச்சை அளித்து வந்த பிரபல மருத்துவர் விவேக் ராய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில் அவர் ஒரு மாத காலமாக கொரோனா வாட்டில் பணியாற்றி வருகிறார் என்றும் தொடர்ந்து ஏற்பட்ட உயிர் பலியால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அவரின் மருத்துவ நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர் விவேக் ராய் பல  நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் இந்த மாதிரியான அவசர முடிவு எடுக்கக் கூடாது என்றும் எந்த சூழ்நிலையிலும் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |