கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்க விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கம் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்களின் நிலத்தில் கலப்படம், ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவை இல்லாமல் விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள், சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்வதற்கான வார சந்தை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் இருக்கும் மைதானத்தில் தொடங்கப்பட்டது.
இந்த வார சந்தையானது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இந்த வார சந்தையில் அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை வாங்கி பயனடைவார்கள் குறிப்பிடத்தக்கது.