தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பைக் காட்டிலும் கலை, அறிவியல் படிப்புகளில் சேரதான் மாணவர்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இருக்கிறது. இக்கல்லூரிகள் அனைத்திலும் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கிறது. இந்த வருடம் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் கலந்தாய்வு தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி, பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், விலங்கியல் போன்ற பாடங்களுக்கான கலந்தாய்வு ஆண்களுக்கு இன்று காலை 10:30 மணிமுதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் பெண்களுக்கு நாளை காலை 10:30 மணிமுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மீதம் உள்ள பாடங்களில் 300-400 மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி வரலாறு, வணிகவியல், வணிக வேளாண்மையியல், பொருளியல் போன்ற பாடங்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் வரும் 12ம் தேதி காலை 10:30 மணி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வரலாறு, வணிகவியல், வணிக வேளாண்மையியல், பொருளியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 13 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வில் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மீதம் உள்ள பாடங்களில் 250-400 எடுத்தவர்கள் பங்கேற்கலாம். அதுமட்டுமல்லாமல் பி.ஏ தமிழ் மற்றும் பி.ஏ ஆங்கிலம் பாடங்களுக்கான கலந்தாய்வு வரும் 16 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கலந்தாய்வுக்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கு மீதம் உள்ள பாடங்கள்தான் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட மாணவர் கலந்தாய்வு நடத்தப்பட்ட நாளிலேயே பெற்றோர் (அல்லது) பாதுகாவலருடன் வந்து முழு கல்லூரி கட்டணத்தையும் செலுத்தும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கலந்தாய்வில் பங்கேற்கும்போது மாணவர் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பதிவு செய்த விண்ணப்பபடிவம், அசல் மாற்று சான்றிதழ், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்று, 4 பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் போன்ற ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.