Categories
மாநில செய்திகள்

கலந்தாய்வு தேதி: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக அரசின் பல துறைகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் திறமைவாய்ந்த ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது நடத்தி வருகிறது. அதாவது குரூப்-1, குரூப்-2 & 2A, குரூப்-3, குரூப்-4 என குரூப் 8 வரை பல பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உட்பட 66 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-1 முதல்நிலைத் தேர்வை சென்ற வருடம் ஜனவரி மாதம் தேர்வாணையம் நடத்தியது.

கொரோனா பரவல் காரணமாக முதன்மைத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் சென்ற மார்ச் 4ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு (எழுத்துத் தேர்வு) நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் ஜூலை மாதம் 13 முதல் 15 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது. இவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலை அதிகாரபூர்வ தளத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமானது சமீபத்தில் வெளியிட்டது.

அத்துடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in பக்கத்தில் தேர்வுமுடிவுகளை சரிபார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்குரிய கலந்தாய்வு தேதியானது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வரும் 29ஆம் தேதி அன்று ஆணைய குழு அலுவலகத்தில் காலை 9 மணி அளவில் நடைபெறும் கலந்தாய்வில் தேர்வர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |