ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தலைவர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.