மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் தனித்தனி திறன் வாய்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று வெம்பக்கோட்டை யூனியனை சேர்ந்த 20 அரசு பள்ளி மாணவ- மாணவிகளைத் தேர்ந்தெடுத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ் குமார், விஜயா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மாணவர்களிடம் அவர்களது லட்சியம் குறித்தும், மாணவர்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அகராதி நூல்களை பரிசாக வழங்கியுள்ளார்.