அர்ஜென்டினா நாட்டில் கலப்படம் செய்த கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
அர்ஜென்டினா நாட்டில் கலப்படம் செய்த கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விசாரணை செய்த போலீசார் ஒரு கும்பலை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களை விசாரித்ததில் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடனான போட்டியில் போதை பொருள் தயாரிக்கும் செலவை குறைக்கும் வகையில் கொக்கைனில் சில பொருள்களை கலந்து இருக்கலாம். அது நச்சுத்தன்மை உடையதாக மாறி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கைனில் கலப்படம் செய்யப்பட்ட பொருள் என்னவென்று தெரியாததால் ஆய்வக முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கையை தடுக்க அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து பணியாற்றி வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலப்பட போதைப் பொருளை எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சமீபத்தில் வாங்கிய எந்த போதைப் பொருளையும் உபயோகிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.