பாசுமதி அரிசி – 2 கப்
பச்சை, சிவப்பு, மஞ்சள் குடைமிளாய் (நறுக்கியது) – தலா அரை கப்
தக்காளி, வெங்காயம் – தலா 1
எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க:
துவரம்பருப்பு – கால் கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்புக்கு கொஞ்சம் குறைவாக
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய்த் துருவல் – 6 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
முதலில் தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின் பாசுமதி அரிசியை 20 நிமிடம் ஊறவைத்து, மூன்றரை கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.
வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, இறுதியில் தேங்காய்த்துருவலையும் அதனுடன் சேர்த்து நன்கு வறுத்தப்பின் அடுப்பை அணைத்து விடவும்.
பின் அரைத்த விழுதை மிக்ஸியில் பொட்டு உப்பு சேர்த்து, சற்றுக் கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மூன்று வண்ண குடைமிளகாய்களை சேர்த்து, 2 டேபிள்ஸ்பூன் பொடித்து வைத்த பொடியையும் சேர்த்து, அதன்னுடன் உதிரியாக வடித்த சாதம் மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக் கலக்கவும். இப்போது சூப்பரான குடைமிளகாய் பிரியாணி ரெடி.