Categories
அரசியல் மாநில செய்திகள்

கலவரபூமியாக மாறும் கோவை…. இவங்கள உடனே வெளியேற்றனும்…. எஸ்.பி வேலுமணி அதிரடி….!!!!!!

கரூர் திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளுக்கு நாளை (பிப்ரவரி 19) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில் கரூரில் இருந்து திமுகவினர் சிலர் கோவையில் முகாமிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இவர்கள் அனைவரும் பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபடக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த மாவட்டத்திற்கு துணை ராணுவத்தை வரவழைத்து நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும்.

இதனிடையில் பொய் வழக்குப்பதிவு செய்து அதிமுகவினரே முடக்கி விடக் கூடாது என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டம் இன்று கலவர பூமியாக மாற்றப்பட்டு உள்ளது. அதாவது குண்டர்கள், ரவுடிகள் என்று சிறையில் இருந்து 2,000 பேரை ரிலீஸ் செய்து கோவை மாவட்டத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோவையை ஒரு கலவர பூமியாக மாற்றி பொய்வழக்கு பதிவிடும் சூழ்நிலையை உண்டாக்கி உள்ளனர்.

மேலும் திமுகவை எதிர்க்கக்கூடிய அதிமுகவினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் தாக்கப்படுகின்றனர். இது குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக புகார் கொடுக்க கோவை மாவட்ட ஆட்சி அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் இன்று காலை வருகை புரிந்தனர் ஆனால் ஆட்சியர் இல்லாத காரணத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரிலிருந்து கோவைக்கு வந்து இருக்கக்கூடிய திமுகவினரை உடனடியாக மாவட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஆனால் காவல்துறையே திமுக-வினர் ஆக மாறி பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். கோவையில் இதுவரையிலும் பல்வேறு தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால் இதுபோன்ற மோசமான தேர்தலை நாங்கள் பார்த்ததில்லை. ஆகவே துணை ராணுவம் வந்தால்தான் கோவை மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

உதயநிதி ஸ்டாலின் இங்கு உள்ள அமைச்சர்கள் போன்றோர் சேர்ந்துகொண்டு கோவையில் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அதிமுக வெற்றி பெறவே கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும்  அதிமுக வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, உதாரணமாக வடபள்ளி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார், திமுக-வினரை போன்று ஜீப்பில் வந்து பரிசுப்பொருட்கள் கொடுக்கிறார். இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அதிமுகவினர், சுயேச்சைகள் ஓட்டு கேட்டால் திமுகவிற்கு எதிராக ஓட்டு கேட்க கூடாது என்று மிரட்டுவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். வெளியூர் தொண்டர்களை வெளியேற்றும் வரை இப்படியே தான் இருப்போம் என்று எஸ்.பி வேலுமணி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |