திரையரங்குகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதற்காக பிரெஞ்சு நடிகை செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் கட்ட கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப் பிறகும் திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சினிமா சார்ந்த கலைஞர்கள் முறையான வழிகாட்டுதலுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இந்நிலையில் பிரெஞ்சு நடிகையானா கோரின் மாசிரோ என்பவர் பாரிஸில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு ரத்தத்துடன் இருந்த கழுதை ஆடையை அணிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் விருதினை அறிவிக்க மேடையில் ஏறிய அந்த நடிகை திடீரென அவரது ஆடையை கழற்றி நிர்வாணமாக நின்றுள்ளார். மேலும் அவரின் உடலின் முன் பகுதியில் “கலாச்சாரம் இல்லை, எதிர்காலம் இல்லை” என்றும் பின்பகுதியில் “எங்கள் கலையை மீண்டும் தாருங்கள் பிரதமர் ஜீன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இவரது செயலுக்கு இணையவாசிகள் பலரும் ஆதரவு கொடுத்துள்ளனர்.