கலா மாஸ்டருக்கு நடிகை மீனா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின் உடல் உறுப்பு தான தினத்தில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தனது 18 வது திருமண நாளை காலா மாஸ்டர் நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில் விழாவுக்கு வரும்படி மீனாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் மீனால் தான் ஊரில் இல்லை எனக் கூறியதால் கலா மாஸ்டர் வருத்தத்தில் இருந்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது மீனா திடீரென வருகை தந்து கலா மாஸ்டருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது.
https://www.instagram.com/p/CiB9HL5L7mj/?utm_source=ig_embed&ig_rid=b9c7a31d-ff42-4d23-8c76-df19a1434d7e