அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் புதிதாக பல்வேறு வனப் பகுதிகளில் தீ பற்றியிருக்கிறது.
கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் காட்டுத் தீ ஏற்படுவது இயல்பு என்றாலும் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள வனத் தீ பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. தெற்கு லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திலுள்ள ஆரஞ்சு கவுண்டிங்கில் தீவிரமாக பரவி வருவதால் சுமார் ஒரு லட்சம் பேர் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காற்று அதிகமாக வீசுவதால் காட்டுத் தீ பிற இடங்களுக்கும் அதிவேகமாக பரவி வருகிறது. தீயை கட்டுக்குள் கொண்டுவர லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறை கடுமையாக போராடி வருகிறது. ஹெலிகாப்டர்களின் மூலம் தண்ணீர் ஊற்றி வான்வழியே தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.