கலீம், சின்னதம்பி என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியே சென்று பயிர்களை சேதப்படுத்துகின்றது. அதன்படி தருமத்துப்பட்டி, பண்ணைப்பட்டி, கோம்பை, அழகுமடை, அமைதிச்சோலை பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விளைநிலங்களில் புகுந்த காட்டுயானைகளை விரட்டும் பணி நடைபெற்றது. அப்போது அதில் ஒற்றை யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் சுந்தரம் உயிரிழந்தார்.
இதனை அடுத்து கடந்த வாரம் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்ற மாணவர்களை பின்தொடர்ந்து அந்த யானை விரட்டியது. இதனால் மாணவர்கள் பயந்து பெரிய பாறை மீது ஏறி உயிர் பிழைத்தனர். இதனை அடுத்து காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த ஒற்றை காட்டு யானை அவ்வப்போது விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகளும், பொதுமக்களும் பயத்தில் உள்ளனர்.
இதனை தொடர்ந்து ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்கு கலீம், சின்னத்தம்பி என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஒற்றை காட்டு யானையை பிடிக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அந்த ஒற்றை காட்டு யானை பிடிக்கவில்லை. ஆனாலும் பிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கலெக்டர் விசாகன் கூறியதாவது, அட்டகாசம் செய்கின்ற ஒன்றை காட்டு யானையை பிடிப்பதற்கு கலீம், சின்னதம்பி என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த கும்கி யானைகள் 100-க்கும் அதிகமான முறை காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு அனுபவம் பெற்றது.
மேலும் தனியாக நின்று காட்டு யானைகளை பிடிப்பதற்கு உதவி இருக்கிறது. இதனையடுத்து வனத்துறையினரும், கும்கிகளும் கன்னிவாடி வனப்பகுதியில் முகாமிட்டு ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்கு முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் அந்த ஒற்றை காட்டு யானை மறைந்துவிட்டது. அதே நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியம். இதனையடுத்து மயக்க ஊசி போட்டு அந்த ஒற்றை காட்டு யானை பிடிப்பதற்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.