Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலெக்டரிடம் முன்னாள் அமைச்சர் அளித்த மனு…. என்ன தெரியுமா….?? பெற்றோரின் கோரிக்கை…!!

இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அபுதாபியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரேம்குமார் கடந்த 21- ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பிரேம் குமாரின் பெற்றோர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.., விடம் பேசி தங்களது மகனின் உடலை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் கவிதா ராமவிடம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ..,மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் பிரேம்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |