Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கலெக்டரின் அதிரடி உத்தரவு…. படிப்பை தொடரும் இடைநின்ற மாணவர்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பல்வேறு சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இடை நின்ற மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த தகவலின் படி அதிகாரிகள் சித்தேரி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை அறிந்தனர். இந்நிலையில் அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறி அறிவுரை வழங்கியுள்ளனர். பின்னர் இடைநின்ற 5 மாணவர்களையும் சித்தேரி அரசினர் உயர்நிலை பள்ளியில் சேர்த்தனர்.

மேலும் பள்ளிக்கு செல்லாத ஒரு குழந்தையை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்த்தனர். இதேபோல் பள்ளூர் கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்களும், வேகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவர்களும் ஏற்கனவே பள்ளியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். குழந்தைகளை பல்வேறு குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் அரக்கோணம் உதவி கலெக்டர், அரக்கோணம் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம் என வருவாய் அலுவலர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |