தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்கள் ஆகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு அனுப்பிய மெசேஜ் ஐ இணையத்தில் பகிர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் சமூக ஊடகங்களிலும் தீவிரமாக இயங்குவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இன்ஸ்டாகிராம் கணக்கில் நேரடி தகவல் வழி வந்த மாணவர்கள் திங்கள்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடக்கோரியுள்ளனர். அதற்கான ஸ்கிரீன்ஷாட் களை எடுத்த கவிதா ராமு தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கலெக்டர் அம்மா உங்கள் முடிவில் தான் எங்களின் சந்தோஷம் இருக்கு. ப்ளீஸ்.. செல்லம் கோயில் கட்டுறேன் என மாணவர்கள் பலரும் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி இருக்கிறார்கள்.