சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை வீச்சு தொடங்கியுள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ராமன் தலைமை தாங்கியுள்ளார்.
அப்போது அவர் கூறியுள்ளதாவது, தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் அரசு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்னும் இரண்டு வாரங்களுக்கு மிகத்தீவிரமாக வைரஸ் பரவும் சூழல் உள்ளதால் பொது மக்கள் முக கவசம் அணியாமல் மற்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.