Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்…. பொதுமக்கள் தர்ணா போராட்டம்….!!!!

தென்காசி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு சமுதாய மக்கள் வழிபட்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இரு சமூகத்தினரும் தற்சமயம் தனித்தனியாக வழிபாடு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கோவில் வழிபாட்டில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தெரிவித்து மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று முன்தினம் திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். ஒருதலைபட்சமாக செயல்படும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரு தரப்பு பொதுமக்களும் கோவிலில் முறையாக வழிபடும் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |