Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கலெக்டர் கார் மோதி… கொத்தனார் பலி… ரூ 21 1/4 லட்சம் இழப்பீடு… மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவு…!!

கடலூர் கலெக்டர் கார் மோதிய விபத்தில் உயிரிழந்த கொத்தனார் குடும்பத்திற்கு ரூ 21 1/4 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் 27 வயதான பெந்தவாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வாணி என்ற மனைவியும் உள்ளார். இந்நிலையில் பெந்தவாசு கடந்த 2017 ஆண்டுஅக்டோபர் 31-ம் தேதி அன்று சென்னை கிழக்கு கடற்கரை ரோட்டில் உள்ள உத்தங்குடி பகுதியில் சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த கடலூர் மாவட்ட கலெக்டரின் கார் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பெந்தவாசு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பெந்தவாசு மனைவி சென்னையில் உள்ள மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து ரூபாய் 45 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன் தீர்ப்பில், அந்த இடத்தில் கலெக்டரின் கார் வேகமாக சென்றுள்ள நிலையில் பெந்தவாசு சாலையை கடக்க முயலும்போது காரின் வேகத்தை குறைக்க ஓட்டுனர் பிரேக் போட்டார்.

ஆனாலும் கார் பெந்தவாசு மீது மோதியது. இதில் பெந்தவாசும் கவனக்குறைவாக சாலையை கடந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இதனடிப்படையில் நீதிபதி பெந்தவாசு குடும்பத்திற்கு கலெக்டர் இழப்பீடாக 21,27 800 ரூபாயை வருடத்திற்கு 7  1/2 சதவீதம் வட்டி அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |