Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரின் ஆட்சியில்…! ”ஆண்டவனே மகிழ்ச்சி”… முக.ஸ்டாலின் பெருமிதம் ..!!

கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகளைப் பார்த்து ஆண்டவனே மகிழ்ச்சி அடைவதாக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாராட்டியதாக முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.

நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,  நான் சீமான் வீட்டு பிள்ளை இல்லை. சாமானிய வீட்டுப் பிள்ளை என்று கூறினார் நமது கலைஞர். அவரது ஆட்சியை சாமானியர்களுக்கான ஆட்சி தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஏழை எளிய பாட்டாளிகள் பயன்பெறும் ஆட்சியாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது முரசொலி பத்திரிக்கையில் தலைவர் கலைஞர் அவர்கள் “ஏழை குலத்தில் உதித்த ஒருவன் ஏறுகிறான் அரசு கட்டில். இது ஏழைக்கு வாழ்வு வந்தது” என எழுதினார்.

தலைவரின் ஆட்சி ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்க்கும் ஆட்சியாக இருந்தது. குடிசை மாற்று வாரியம் அமைத்தது திமுக, ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியம் அமைத்தது திமுக, தொழுநோயாளிகள் இல்லம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்து திமுக, ஏழைகளுக்கு கண்ணொளி திட்டம் தொடங்கியது திமுக, விதவைகள் மறுவாழ்வு நிதி வழங்கியது திமுக, தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்கியது திமுக, விவசாய தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க ஆணையம் அமைத்தது திமுக.

நகர்ப்புற தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஆணையம் அமைத்தது திமுக, விவசாயத் தொழிலாளர்களை அவர்களுக்கே சொந்தமாக்கும் வகையில் குடியிருப்பு மனை சட்டம் கொண்டு வந்தது திமுக. கை ரிக்ஷ  ஒழித்தது திமுக, இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது திமுக, ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி என்ற பெயரில் அழைத்து அதற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது திமுக, ஊனமுற்றோர் நல்வாழ்வுத் திட்டம் அமைத்தது திமுக, பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கருணை இல்லங்கள் அமைத்து கொடுத்தவர் கலைஞர் அவர்கள்.

இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது திமுக, ஏழை நடுத்தர வகுப்பு மக்களுக்கு இலவச கல்வி வழங்கியது திமுக, ஏழை பெண்களுக்கு திருமண உதவி திட்டம் கொண்டு வந்தது திமுக.குடும்பத் தலைவரை இழந்து தவிக்க கூடிய மகளிருக்கு உதவித் திட்டம் கொண்டு வந்தது திமுக, மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கியது திமுக, அனைவருக்கும் காப்பீட்டு திட்டம் வழங்கியது திமுக, அமைப்பு சாரா தொழிலாளர் வாரியம் அமைத்தது திமுக உழவர் சந்தைகள் திறந்தது திமுக என இன்று முழுக்க கூறுமளவிற்கு பல சாதனைகள் உள்ளது.

அந்த அளவிற்கு ஒடுக்கப்பட்ட ஏழைகளின் ஆட்சியாக தமிழக ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர் முதலமைச்சராக இருந்த கலைஞர். அதனால்தான் கலைஞரின் ஆட்சியை இந்தியாவின் பெரிய மனிதர்கள் போற்றினார்கள். பேரிலேயே கருணையும் நிதியும் கொண்டவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் என்று பாராட்டினார் ஆச்சாரியா வினோபா. வலிமையும் தகுதியும் உடைய கலைஞர் கருணாநிதியின் கையில் தமிழ்நாடு ஒப்படைக்கப்பட்ட காரணத்தினால் தான் அனைத்துத் தரப்பினரும் உயர்வடைந்து வருகிறார்கள் என்று கூறியது பாபு ஜெகஜீவன்ராம்.

கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகளைப் பார்த்து ஆண்டவனே மகிழ்ச்சி அடைவதாக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாராட்டினார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களின் கொள்கைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி கே ஆர் நாராயணன் அவர்கள் பாராட்டினர். வள்ளுவர் நெறியும் அண்ணா நெறியும் புதிய புறநானூறு படைக்கும் புலவர் என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் கலைஞரை போற்றினார். இப்படி இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் முதல் ஆன்மிகப் பெரியவர்கள் வரை பாராட்டிய ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.

Categories

Tech |