Categories
மாநில செய்திகள்

கலைஞரின் பேனா நினைவு சின்னம்…. கிளம்பியுள்ள எதிர்ப்புகள்…. நெட்டிசன்களின் அசத்தல் யோசனை….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல் அவர் பயன்படுத்திய பேனாவுடன் சேர்த்து மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ரூபாய் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நினைவிடத்துடன் சேர்த்து கலைஞர் பயன்படுத்திய பேனா நினைவுச் சின்னமாக கடலுக்குள் வைக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. இதற்கு 80 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்படும்.

இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்றால் திமுக அரசின் சொந்த பணத்தில் வைக்க வேண்டிதானே, எதற்காக மக்கள் பணத்தில் வைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அமைச்சர் எ.வ வேலு கருணாநிதிக்கு மக்கள் செலுத்தும் மரியாதையின் வெளிப்பாடாகத்தான் நினைவிடம் அமைக்கப்படுவதாக கூறினார்.

இப்படி இருக்க நெட்டிசன்கள் தற்போது புதிதாக ஒரு யோசனையை தெரிவித்துள்ளனர். அதாவது கலைஞரின் பேனா நினைவு சின்னத்தோடு சேர்த்து, அண்ணா பயன்படுத்திய மூக்கு கண்ணாடி மற்றும் பெரியாரின் தடி ஆகியவற்றையும் சேர்த்து வைத்தால் அதிமுக கட்சியால் விமர்சிக்க முடியாது எனவும், பொதுமக்களும் ஓரளவு திருப்தி அடைவார்கள் எனவும் கூறுகின்றனர்.

Categories

Tech |