Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞருக்கு ஏன் உளுந்தவடை வைக்குறீங்க ? இதுலாம் தப்பு என சொல்லும் ராம ரவிக்குமார் …!!

பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார்,சுவாமிகளை நம்புவது எங்கள் நம்பிக்கை, தலைவர்களை நம்புவது உங்கள் நம்பிக்கை நான். பகுத்தறிவு என்பது என்ன ? நாங்கள் கல்லாக இருக்கக்கூடியகூடியவர்களை கடவுளாக கும்பிடுகின்றோம்.அதை காட்டுமிராண்டித்தனம் முட்டாள்தனம் என்று சொல்கிறீர்கள்.

நீங்கள் ஈ.வே.ராவுக்கும், அண்ணாத்துரைக்கும் என் சிலை வைக்குறீர்கள் ?  இறந்துபோன முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா கலைஞருக்கு ஏன் உளுந்தவடை வைத்து படைத்தோம். செத்துப்போன பிணம் சாப்பிடுமா ? வடை சாப்பிடுமா ? கேள்வி ஆயிரம் இருக்கலாம். அதை எல்லாம் நான் விமர்சிக்க விரும்பவில்லை. நாங்கள் எங்களை மட்டும் விமர்சிக்காதீர்கள் என்கிறோம். இந்த மத நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டாம் என்று சொல்கிறோம்.

இருக்கக்கூடிய அடையாளங்களை அழிக்க வேண்டாம் என்று சொல்கிறோம், வள்ளுவனை கிறிஸ்தவர்கள் ஆக்காதீர்கள் என்று சொல்கிறோம்.  எங்கள் தமிழ் இலக்கிய முன்னோடிகள் அழிக்காதீர்கள் என்று சொல்கிறேன். வாரலாற்றை தவறாகப் மாற்றாதீர்கள் என்று சொல்கிறோம். இது தப்பு என்று நாங்கள் சொல்கிறோம் இதைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்.

Categories

Tech |