Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரோட பிள்ளை நான்…! ”பேசாதீர்கள் மிஸ்டர் எடப்பாடி” வைகோ சொல்லி இருக்காரு …!!

நேற்று திமுக கூட்டணி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணா விரத போராட்டம் நடத்தியது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய ஸ்டாலின், முதல்வர் எப்போ பார்த்தாலும் நான் விவசாயி நான் விவசாயி அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்களுக்கு என்ன விவசாயம் பற்றி தெரியும். எனக்கு தெரியாது டி ஆர் பாலு அவர்கள் பேசினார்கள் தலைவர் கலைஞர் அவர்கள் 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் நின்று அதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்த விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்.

அது குறித்து சட்டமன்றத்தில் முதல்முதலாக பேசியது தலைவர் கலைஞர் அவரோட பிள்ளை நான். அன்று வைகோ கூறினார் 67 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்த கலைஞரின் பிள்ளை ஸ்டாலின். விவசாய பெருங்குடி மக்களுக்கு இலவச மின்சாரம் தந்த  கலைஞர் அவரது பிள்ளை ஸ்டாலின்  . எனவே இதற்குமேல் பேசாதீர்கள் மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி. இன்னும் நான்கு மாதங்கள் தான் பேசிக் கொள்ளட்டும்.

ஆகவே நான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புவது இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் அந்த விவசாயிகள் எப்போது வெற்றி பெறுகிறார்களோ! அதுவரையில் நமது போராட்டமும் ஓயாது. அதற்கான வியூகத்தை முழுமையாக நமது கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஒன்றிணைந்து கலந்து பேசி முடிவெடுத்து அவ்வபோது அந்த போராட்டத்தை நாங்களும் நடத்துவோம் நடத்துவோம் நடத்துவோம் என கூறி நிறைவு செய்தார்.

Categories

Tech |