Categories
மாநில செய்திகள்

“கலைஞர் எழுதுகோல் விருது”…. உங்களுக்கு வேணுமா?…. இதை உடனே பண்ணுங்க…..!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் கலெக்டர் லலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழகத்தில் வருடந்தோறும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் சென்ற 2021ஆம் வருடத்துக்கான இந்த விருதுக்கு உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதில் ரூபாய் 5 லட்சம் பரிசு தொகையுடன், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இதில் விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தது 10 வருடங்களாக தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும். மேலும் பத்திரிகை பணியை முழுநேர பணியாக கொண்டிருக்க வேண்டும். அத்துடன் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்கள் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றி இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்கள் இடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நேரடியாக (அல்லது) மற்றொருவர் பரிந்துரையின்படி (அல்லது) பணிபுரியும் நிறுவன பரிந்துரையின் பெயரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதி ஆனது. இந்த தகுதிகளை கொண்ட விண்ணப்பங்கள் விரிவான விபரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமை செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு 30/04/2022-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |