Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கலைஞர் எழுதுகோல் விருது” இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த இதில் இதழியலாளருக்கு  எழுதுகோல் விருது  மற்றும் 5 லட்சம் பரிசு தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த விருதிற்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது தமிழ் இதழியல் துறையில்  பணிபுரிகிறவராகவும், பத்திரிகைப் பணியை முழுநேர பணியாக கொண்டு இருக்க வேண்டும். மேலும் இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும் , பெண்களின் முன்னேற்றத்திற்காக  பங்காற்றி இருக்க வேண்டும், விண்ணப்பதாரரின் எழுத்துக்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்க வேண்டும். எனவே  அனைத்து தகுதிகளும் உள்ள விண்ணப்பதாரர் இயக்குனர் செய்தி தொடர்பு துறை தலைமை செயலகம், சென்னை-600009 என்ற முகவரிக்கு தனது விவரங்கள் மற்றும் அதற்கு உரிய ஆவணங்களை  வருகிற 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |