மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு விடிவெள்ளி, சிறப்பு பள்ளி நகர்ப்புற வீடற்றோர் இல்லம், காட்டூர் அந்தோனியார் ஆதரவற்றோர் இல்லம் போன்ற பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சிறார் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய உபகரணங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அன்பில் மகேஷ் அறக்கட்டளையின் மூலமாக மருத்துவ உதவி, கல்வித் தொகை போன்றவைகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர் செந்தில், காட்டூர் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.