தமிழகத்தில் பல்லக்கு தூக்குவது இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக தமிழக மண்ணில் இருக்கும் சித்தாந்தம். இதனை நிறுத்துவதற்காக 2022ல் புதிதாக சித்தாந்தத்தை கொண்டு வந்துள்ளார்கள். தமிழக அரசு குருமார்களை அவமானப்படுத்துகிறது, ஆதினங்களை மிரட்டுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் சித்தாந்தம் பிறப்பதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் ஆதினங்கள் பின்பற்றும் சித்தாந்தம் இருந்துள்ளது.
2022-ல் பல்லக்கு தூக்குவது தூக்குவதற்கு அனுமதி இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள் என்றால் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை ஸ்டாலின் முட்டாள் என்று சொல்கிறாரா ? ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞரே பல்லாக்கு தூக்குவதை தடை செய்யவில்லை. அப்படி என்றால் தன்னுடைய அப்பா முட்டாள் என்று இவர் ஒத்துக்கொள்கிறாரா ? தான் அறிவாளி என்று இதை செய்கிறாரா ? என பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்