Categories
மாநில செய்திகள்

கலைஞர் பேனா நினைவு சின்னம்…. தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதம்…..!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் அடிப்படையில் சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்துக்கு அருகில் கடலில் தமிழ்நாடு அரசு சார்பாக ரூபாய்.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டுமானத்திற்கு “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்” என்று பெயரிடப்பட இருக்கிறது. இத்திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில் மெரினாவில் கருணாநிதியின் நினைவு இடம் அருகில் கடலில் பேனாநினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்தியஅரசானது முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பேனா நினைவுசின்னம் அமைப்பதற்கு அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறை கடிதம் அனுப்பியிருந்தது. தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுகுழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்கவேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது. தற்போது அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையினை தயாரிக்கவும் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த அறிக்கையை விரிவாக 4 வருடங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அனைத்து அனுமதிகளையும் பெற்று அடுத்தகட்ட கட்டுமான பணியை துவங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |