பிரபல யூடியூப் சேன்னல் மீது காவல்துறையில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார், நான் எந்த மதத்தையும் விமர்சிக்க கூடாது என்று நினைக்கிறேன். நீங்கள் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழறிஞர் உடைய கூட்டம் என்பது 1931இல் நடந்ததாகச் சொல்கிறார்கள், இதே தமிழ் ஆண்டு எப்பொழுது என்பதற்கான கூட்டமல்ல, திருவள்ளுவர் என்று பிறந்தார், அவர் பிறந்த தினம் திருவள்ளுவர் தினம் என்று கொண்டாட வேண்டுமென்ற அடிப்படையில்தான் அந்த கூட்டம் நடந்தது.
திருவள்ளுவர் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதற்கான கூட்டம்தான், அதன் பிறகு 1963ல் ராயப்பேட்டையில் ஒரு கூட்டம் நடக்கிறது, அப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலா கலந்து கொள்கிறார், இது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு குறிப்பாக திரு கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தை பொங்கல் குறித்தான, திருவள்ளுவர் தினம் குறித்தான ஒரு விஷயத்தை சொல்கிறார்கள்.
ஆட்சியினால், சட்டத்தினால் ஏற்கனவே இருக்கக்கூடிய மரபுகளை மாற்ற முடியாது. நான் சொல்கிறது சட்டம் போடுவதனால்…. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். ஜெயலலிதா அம்மா இருந்த போது எந்த புத்தாண்டு நாம் கொண்டாடினோம், அப்போ கலைஞர் ஐயா வந்த ஒரு புத்தாண்டு, ஸ்டாலின் ஐயா வந்தா ஒரு புத்தாண்டு என்கிறது இந்த திராவிட அரசியல் காழ்புணர்ச்சிக்கு உண்டான அரசியலில் தமிழர்களை ஏன் வதைக்குறீர்கள் ? அதுதான் என்னுடைய கேள்வி என விமர்சித்தார்.