தமிழ்த் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (91) சென்னையில் நேற்று மாலை காலமானார். இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் படங்கள் உட்பட சுமார் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதில் வல்லவரான இவர், திருவாரூரை சேர்ந்தவர். ஆரூர்தாசின் கலைத் திறமையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்துள்ளது. இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories