Categories
கல்வி மாநில செய்திகள்

கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்கலாம் – உயர்கல்வித்துறை அனுமதி!!

கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. அரசு பள்ளியை நோக்கி நிறைய மாணவர்கள் செல்கிறார்கள்.. தமிழகம் முழுவதும் 143 அரசு கலைக்கல்லூரி செயல்படுகிறது. இந்நிலையில் 2021 – 22 கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான அரசாணையை  வெளியிட்டது தமிழக அரசு..

அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கலைப் பாட பிரிவில் 25 சதவீதம் கூடுதல் இடங்களுக்கு உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதேபோல அறிவியல் பாடப் பிரிவுகளில் கல்லூரிகளில் ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25% இடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்கள் இடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |