Categories
மாநில செய்திகள்

கலை, அறிவியல் கல்லூரிகளில்…. 25% மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு…. உயர்கல்வித்துறை அனுமதி…!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக சேர்ப்பதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு 25% கூடுதல் இடங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இதற்கு தற்போது உயர்கல்வித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பால் ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளுக்கு ஏற்ப கூடுதல் இடங்கள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெறவேண்டும் எனவும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |