Categories
மாநில செய்திகள்

கலை, அறிவியல் படிப்புகளுக்கு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அரசு கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://tngasa.in என்ற இணையத்தளம் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மொத்தம் 99,600 இடங்களுக்கு விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.

Categories

Tech |