கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு போன்று நுழைவுத்தேர்வு நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக அருணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற முடிவு கொண்டுவரப்பட்டது. இதற்கு பல கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையே தீர்ந்தபாடில்லை. இதில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் பட்டியல் சாதி, பிற்படுத்தப்பட்ட வீட்டுப் பிள்ளைகளின் படிப்பில் மண்ணள்ளிப் போட பிஜேபி என்னும் மனுவாக கட்சி முயற்சி செய்து வருவதாகவும் இடதுசாரி சிந்தனையாளர் அருணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இதனோடு தான் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இந்த கட்சிகளை எல்லாம் துடைத்தெறிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.