ஜெர்மன் நடனக்கலைஞர்கள் பலூன்களுக்குள் நடனமாடிய காட்சி பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா வைரஸ் உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.
இந்நிலையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் முயற்சியில், கட்டுப்பாடுகளுடன் பல முயற்சிகளை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. அவ்வகையில் ஜெர்மன் நடன கலைஞர்கள் சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் நோக்கில் பிவிசி ஆல் செய்யப்பட்ட பலூன்களுக்குள் நடனம் ஆடியுள்ளனர். இது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனைக் கண்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.