Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்தில் 12 பேர் பரிதாப பலி…. 5 பேரின் குடும்பத்தினருக்கு வேலை மற்றும் நிவாரணம்….. முதல்வர் மம்தா அறிவிப்பு….!!!!!

மிசோரமில் உள்ள நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த‌ கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் திடீரென அதிக அளவில் கற்கள் விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் தகவல் அறிந்து உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களில் நேற்று 8 பேர் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், இன்று 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களில் 5 பேர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி மற்றும் வேலை வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |