Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கல்யாணத்திற்குப் பின் காஜல் நடித்து முடித்த முதல் படம்..‌. ட்விட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின் நடித்து வந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும்  நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று திரும்பினார். தற்போது நடிகை காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் . டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகைகள் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்து வந்தனர் .

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளார். இது அவரது திருமணத்திற்கு பின் நடித்து முடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் நடிகை காஜலுக்கு திருமணத்திற்கு பிறகும் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Categories

Tech |