Categories
பல்சுவை

கல்யாணத்தில் கலவரம் செய்த விருந்தினர்கள்…. போர்க்களமாகிய மண்டபம்…. வைரல்….!!!

சமூக வலைதளங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இவற்றை நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து சிரிக்கின்றனர். அதன்படி சமீபகாலமாக திருமண வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது. அதிலும் புதுமண தம்பதிகளின் வீடியோக்கள் எப்போது மிக விரைவாக வைரல் ஆகி வருகிறது. புதுமண தம்பதிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பொதுவாக கல்யாண வீட்டில் எந்த அளவுக்கு மகிழ்ச்சி உற்சாகமாக இருக்கிறது, அதே அளவு ஒருவித பயமும், பதட்டமும் இருக்கும். அதன்படி தற்போது வெளியான வீடியோ இவை அனைத்தையும் விட வித்தியாசமாக உள்ளது. கேரளவில் உள்ள ஒரு வீட்டில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கல்யாண வீட்டில் இரவு உணவிற்கு உட்காரும்போது கூடுதல் அப்பளம் தாறுமாறு மணமகன் தரப்பினர் கேட்டுள்ளனர்.

ஆனால் அதற்கு ஒருவரும் சரியாக பதில் அளிக்கவில்லை. அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அப்பளம் திரும்ப திரும்ப கொடுக்க முடியாது என்று கேட்ரிங் ஏஜென்சியில்ல் இருந்து பதில் வந்தது. இதனால் வெறும் வார்த்தைகளால் சண்டை தொடங்கிய பிறகு அடிதடி தகராறு முடிவடைந்தது. அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஒருவரை ஒருவர் ஷு மற்றும் செருப்பால் அடித்துக் கொள்வது போல் வீடியோவில் தெரிகிறது. மேலும் நாற்காலி மேசைகளை எடுத்துக்கொண்டு சண்டை போடுகின்றனர். இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். ஒரு கணம் திருமண வீடு போர்க்களமாக மாறியது. இந்த வீடியோவில் இவர்கள் சண்டே பார்த்த நெட்டிசன்கள் ஆச்சிரியமடைந்தார்கள். இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலவித கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

Categories

Tech |