Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணத்துக்கு கிளம்பனும்… தயாராகிய போது ஷாக்… சோகத்தில் குடும்பத்தினர் …!!

அண்ணா நகர் அருகே துணிகளை அயன் செய்தபோது மின்கசிவு ஏற்பட்டு பெண் உயிரிழந்தது சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்தின் அண்ணாநகர் 37-வது தெருவில் வசித்து வருபவர் நளினி. இவர் நேற்று முன்தினம் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவரின் துணிகளை அயர்ன் செய்த போது அயன்பாக்ஸ்ஸில் ஏற்பட்ட மின் கசிவின் மூலம் அவர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்து  உள்ளார்.

இதை பார்த்த அவர்  குடும்பத்தினர் நளினியை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து  விட்டதாக கூறினர். இது  குறித்து போலீசார்  வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Categories

Tech |